புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த சரண்யா துராடி சுந்தர்ராஜ் 4 ஆண்டுகள் அந்த தொலைக்காட்சியில் வேலை பார்த்தார். பின்னர் பட வாய்ப்புகள், சீரியல் வாய்ப்புகள் என அடுத்தப்படுத்து கிடைக்க துவங்கியது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடித்து சீரியல் நடிகையாக அறிமுகமானார். மேலும் சரண்யா ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்து மேலும் பிரபலமடைந்தார், சமீபத்தில் சரண்யா சமூகவலைதளத்தில் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
இந்த நிலையில் இவர்கள் திருமணம் பற்றி பேட்டியில் கேட்கும்போது நான் பிரவுன் கலரில் நிறைய தாடி வைத்திருக்கும் ஒரு தமிழ் பையனை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறினார் அது தற்பொழுது உண்மையாக்கிவிட்டார். இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்கள் இவர் எப்படி தமிழில் அதிக ஆர்வம் இருக்கிறதோ அதேபோல் அவரின் கணவர் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குவார் என புகழாரம் சூட்டியுள்ளார்.
இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். அந்த வகையில் தற்போதைய ஒரு வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.